எமனுக்கு ஒரு சவால் இதோ

பிறக்கும் முன்னே செல்போன்
பேசும் காலம் வந்திடுமோ ?! கருவில் குழந்தை
எனக்கும் மிட்டாய் வேணுமுன்னு
எஸ் எம் எஸ் கொடுத்திடுமோ ?!

யாரு கண்டா எதுவும் நடக்கும் - இனிமே
எமனுக்கும் கூட பைத்தியம் பிடிக்கும்
எந்திரமா மனிதனா யாரைத் தூக்க வந்தோமுன்னு
எமனுக்கும் கூட பைத்தியம் பிடிக்கும்

எல்லாம் பூமியில் ஒரே மாதிரியே

இருப்பதுபோல் தோன்றும் உணர்வோடு.....
இருப்பதுபோல் தோன்றும் உயிரோடு
இருந்தும் - இருந்தும் - இருந்தும்

இறந்துபோன மனிதநேயம் கண்டு

எமனுக்கும் கூட பைத்தியம் பிடிக்கும்
எந்திரமா மனிதனா யாரைத் தூக்க வந்தோமுன்னு

எழுதியவர் : ஹரி (22-Mar-15, 7:34 am)
பார்வை : 116

மேலே