சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சரவணன்: என்ன கடைக்காரரே இட்லி ரெடியா..

கடைக்காரர்: ம்... எல்லாம் ரெடியா இருக்குப்பா.

சரவணன்: ஒரு 10 இட்லி கட்டுங்க பார்க்கலாம்.

கடைக்காரர்: அப்படி உக்காருப்பா 10 நிமிசத்துல கட்டித்தாரன்.

சரவணன்: என்ன கடைக்காரரே வாழையிலையில கட்டுறீங்க காகிதம் இல்லையா..

கடைக்காரர்: இருக்குப்பா அதிலியே கட்டீர்லாமா..

சரவணன்: அதுல கட்டுங்க கடைக்காரரே அப்பத்தான் ஓட்டை விழுகாது.

கருப்புக்காகிதம்: யாரோ புதுசா இங்க வந்திருக்கர மாதிரி இருக்கே..

வெள்ளைக்காகிதம்: நா பக்கத்தூர் இட்லி கடையில இருந்து வர்ரேன். நீ எங்கிருந்து வந்த?

கருப்புக்காகிதம்: நானும் அந்த பக்கத்தூர் கறிக்கடையில இருந்து வர்ர. நா இங்கு வந்து நாலு மாதம் ஆச்சு. ரொம்ப சந்தோசமா காத்துல பறந்துடே இருக்க. நீ ஏன் சோகமா இருக்க.

வெள்ளைக்காகிதம்: என் மேல சூடா இட்லி வெச்சாங்க அதனால நா கொஞ்சம் உருகி அந்த இட்லில கலந்து அவன் வாய்குள்ள போய்டேன்.

கருப்புக்காகிதம்: அட கவலைய விடு அந்த மனுச சீக்கிரம் செத்துருவா.

வெள்ளைக்காகிதம்: ஆஹா ஹா ஹா... அப்படியா சீக்கிரம் சாகட்டும். அப்பத்தான் நான் ரொம்ப சந்தோசப்படுவேன்.

கருப்புக்காகிதம்: ம்... சீக்கிரமா அந்த மனுசங்கல தீத்துக் கட்டனும் ஏதாவது உன் கிட்ட புது யோசனை இருக்கா..

வெள்ளைக்காகிதம்: அந்த மனுசங்க நம்மலைய தீ விட்டு கொழுத்துவாங்க அப்ப நம்ம நல்ல காத்துக்குள்ள கலந்து அவங்க மூக்குக் குள்ள புகுந்தர்லாம்.

கருப்புக்காகிதம்: ஆஹா ஹா ஹா... செம யோசனை.சூடு வாங்குன அனுபவம் நல்லா வேலை செய்யுதே...

ரேனுகா : சரவணா நாளைக்கு சுதந்திர தின விழா ஆனா நாடே ஒரே குப்பையா கிடக்குது.

சரவணன் : அதுக்கு நம்ம என்ன பனறது ரேனு.

ரேனுகா : நம்ம ஊருக்குள்ள இருக்க காகிதத்தை எல்லாம் பொருக்கலாம் சரவணா ஓரலவுக்கு சுத்தமாகும்.

சரவணன் : எல்லாம் பொருக்கி தீ வச்சு கொழுத்தீர்லாமா...

ரேனுகா : அய்யோ வேண்டாம் வேண்டாம்... அப்படி பன்னுனா காற்று மாசாயுரும்.

சரவணன் : அப்புறம் என்ன பண்றது.

ரேனுகா : எல்லாம் பொருக்கி கொண்டுபோய் காகித மறுசுழற்சி ஆலையுல கொடுத்துரலாம்.

கருப்புக்காகிதம்: ஏய் நாம போட்ட திட்டமெல்லாம் வீணா போச்சு.

வெள்ளைக்காகிதம்: என்ன சொல்ர... எனக்கு எதுவும் புரியல..

கருப்புக்காகிதம்: அந்த மனுசங்க எல்லாம் நம்மலைய எரிக்காம மருபடியும் புது காகிதமா மாத்த போராங்கலாம்..

வெள்ளைக்காகித: ச்சே.. இந்த மனுசங்க எல்லாம் உசார் ஆயிட்டாங்க இதுக்குத்தான் நாம சத்தமா பேச கூடாதுங்கரது.

கருப்புக்காகிதம்: ச்சே இனி நம்ம வாழ்க்கை இதுதான்.. மறுபடியும் மறுபடியும் காகிதமாகவே தான்...

நெகிலிகல் பயன்படுத்துவதை தவிர்ப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.

எழுதியவர் : ஆ.சத்தியபிரபு (22-Mar-15, 9:06 am)
பார்வை : 1102

மேலே