வசந்தகால நதிகளிலே
வசந்தகால நதிகளிலே..
வைரமணி நீரலைகள்
நீரலைகள் வறண்டுவிட்டால்..
விளைந்ததிடுமோ நெல்மணிகள்
வாடவைத்து வருந்துவதேன்-மரம்
வளரவைத்து மீட்டெடுப்போம்
மீட்சியது இல்லையென்றால்-நம்
வீழ்ச்சியதும் தொடர்ந்திடுமே!
உழுதுழைத்து...
உணவுபடைத்து...
உலகமதைக் காத்திடவே
நீர்நிலைகள் பாதுகாத்து...
நீக்கமற மகிழ்ந்திருப்போம்
(தண்ணீர் தினத்தை முன்னிட்டு போட்டியொன்றில் சமர்பிக்கப்பட்ட என் வரிகள்)