நீலக்குயில் தேசம்29---ப்ரியா
கயல்விழியும் தோழிகளும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த சமயம் அங்கு வந்த அவளை அழைத்தார் அந்த பழைய டிரெயினிங் ஆசிரியர் அசோக்.....இவனா?என மனதுக்குள் நினைத்தவள் என்ன என்று எரிச்சலை வெளியில் காட்டிக்கொண்டு கேட்டாள்.
இவள் கோவமாக இருக்கிறாள் என்பது அவனுக்கு நன்றாக புரிந்தது....இருந்தும் அவளிடம் பேசியே ஆகவேண்டும் என்ற முடிவோடு அவளிடம் ராகேஷ் பற்றி பேச ஆரம்பித்தார்........
ராகேஷ் விஷயத்தை அசோக் பேச ஆரம்பித்ததுமே.....கயல்"வேணாம் சார் நீங்க எதுவும் சொல்ல வேணாம், நான் உங்க கிட்ட பேசவே விரும்பல தயவு செய்து இதற்கு மேல் எதுவும் பேசாதீங்க"என்று திமிராய் பேசினாள்.
இருந்தும் அவன் நான் சொல்றத கேளு கயல் என்று அவள் பக்கத்தில் நெருங்க.....
இதோ பாருங்க சார் இதுக்கு மேலயும் ஏதாவது பேச வந்தீங்கன்னா.......உங்கள பற்றி எல்லாமே கல்லூரிக்கு போகும், என்னிடம் தவறாக பேசியதாக கம்ப்ளைன்ட் பண்ணிருவேன் அப்புறம் நீங்கதான் கேவலப்படுவீங்க-என்று அழுத்தமாய் கனத்த குரலில் சொன்னாள் கயல்.
அதற்கு மேல் அவளிடம் பேச விரும்பாத அசோக் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
தோழிகள் இருவரும் அங்கு நடந்தது எதையும் கவனியாதது போல் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
ச்சே....டூருக்கு வந்தும் நிம்மதியா இருக்க முடில ஒழுங்கா சாப்பிட முடில என்று தனக்குள் பேசிக்கொண்டே சாப்பிடாமல் சாப்பாட்டை வெளியில் கொட்டினாள்.
எவ்வளவுதான் கோவம் என்றாலும் உயிர்த்தோழி ஆயிற்றே.....ஷீபா அஜியிடம் கண்காட்ட அசி அவளது பக்கத்தில் போய் என்ன ஆச்சு இப்போ ஏன் சாப்பிடல? மத்தவங்கள எதுக்கு நீ பாக்குற உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அத தைரியமா செய் என்று பேசி அங்கிருந்து அவளை அழைத்து சென்றாள்.
ஷீபாவைப்பார்த்து கயல் இதுவரை இல்லாத அளவுக்கு கண்ணீர் விட்டு அழுதாள்.....ஆனால் ஷீபா கண்டுகொள்ளவே இல்லை.
கயலின் கண்ணீருக்கான காரணமும் யாருக்கும் புரியவில்லை.
அப்படியே அன்றைய நாளும் கழிந்தது ஆனாலும் தோழிகள் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.
கயலின் மனது மிகவும் குழப்பமாக இருந்தது அம்மாவுக்கு அழைப்பைக்கொடுத்தாள் பேசினாள் மகளின் குரலை வைத்தே ஏதோ மனது சரி இல்லை என புரிந்து கொண்டாள்....நலம் விசாரித்துக்கொண்டு வராத சந்தோஷத்தை வரவழைத்து அம்மாவிடம் நடந்த விஷயங்கள் எதையும் சொல்லாமல் மறைத்துவிட்டாள் கயல்.....அம்மாவும் நம்மை பிரிந்திருப்பதால்தான் குரலிலும் மனதிலும் மாற்றம் என அம்மாவும் நினைத்துக்கொண்டார்கள்.....அம்மாவிடம் பேசியதால் கயல் கொஞ்சம் மன நிம்மதியடைந்தாள்.
அன்று இரவு படுத்ததும் கயல் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது........
எப்போதான் நீலமலைக்கு செல்வது?ஷீபா வேற பேசமாட்டேங்குறா...ராகேஷுடனும் மனம் விட்டு பேசமுடியவில்லை இந்த சந்தர்ப்பத்தை விட்டா நீலமலையில் வைத்து காதல் சொல்லணும்ங்க்கிற நமது ஆசை எப்பவுமே நிறைவேறாது ஆக கண்டிப்பாக இந்த சந்தர்ப்பத்த தவறவிடவேக்கூடாது என்று மனதில் நினைத்துக்கொண்டாள் கயல்.
இப்படி இரண்டு நாட்கள் தாண்டிவிட்டது தோழிகள் பேசிக்கொள்ளவில்லைதான் என்றாலும் மற்றவர்கள் கண்முன் நெருக்கமாகவே நடந்து கொண்டனர்.....கயல் முகம் வாடி இருந்தாலும் தன் காதலனை பார்க்கும் போதெல்லாம் அந்த அழகிய பூ போன்ற இதழ்களை விரித்து புன்னகை செய்வாள்.....இந்த புன்னகையாலும் வசீகரக்காந்தகண்களாலும் தான் அவள் பலரையும் சுண்டியிளுத்திருக்கிறாள்.....
அப்பா! என்ன ஒரு அழகு என்று அனைவரும் சொல்லுமளவுக்கு தனிதான் கயல்.....அவளருகில் இருக்கும் போது வரும் அந்த சாமந்திப்பூவின் வாசமும் அனைவரையும் அவள் பக்கம் இழுத்துக்கொள்ளும்.
ஆனால் இவள் மனது முழுவதும் ராகேஷ் மட்டுமே இருக்கிறான்.
இன்றிரவு ஊட்டிக்கு கிளம்பவேண்டும் அப்படியே நீலமலை அப்புறம் போற வழியில கொடைக்கானல் பக்கம் போயிட்டு இறுதியில் கொச்சிக்கு போயிட்டு சுற்றுலாவை முடித்துக்கொள்ளலாம் என்று தாங்கள் போக வேண்டிய இடங்களை பட்டியலிட்டுக்கொண்டிருந்தார் அந்த அறையிலுள்ள மாணவிகளின் கண்காணிப்பு மேடம்.
ஐயோ!நீலமலைக்கு நாளைக்கா?என்று மனதிற்குள் பெரும் ஆச்சர்யமடைந்தாள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தாள்.
தன் எண்ணம் போல் நாளைக்கே தன் காதலை அந்த நீலமலையில் நம் நீலக்குயில் தேசத்தில் வைத்து சொல்ல வேண்டும் என்று நினைத்தவள்...... தான் அப்படி சொல்வது போல் கண்களை மூடி ஒரு முறை நினைத்தும் கொண்டாள்.
அன்றிரவே அனைவரும் கிளம்பினர்.......ஜில்லென்ற ஊட்டிக்குளிரில் அந்த மண்ணில் காலடி எடுத்துவைத்ததும் மனதும் குளிரில் குளிர்ந்தே போனது உடல் நடுக்கமிருந்தாலும் புதுவிதமாகவே இருந்தது.......முதல் முறை ஊட்டியில் அப்பா என்று ஆகாயத்தைப்பார்த்து கைவிரித்து இயற்கையை முழுவதும் தன்வசப்படுத்துவது போல் அணைத்துக்கொண்டாள் ரசனைக்காரி.....இயற்கையின் காதலி கயல்.
நெடுந்தூர பயணம் செய்த களைப்பு எதுவும் தெரியாதபடி ஊட்டி சூழ்நிலை அழகாய் இருந்தது அனைவருக்கும் பிடித்திருந்தது.முதலில் தாவரவியல் பூங்காவிற்கு சென்று விட்டு நீலமலை என்றனர்.....நீலமலை நீலமலை என்றதும் இவள் மனதில் இதமாய் அலைபாயத்தொடங்கியது.........இங்கு மாணவர்களை அவர்கள் விருப்பப்படி ப்ரீயாக விட்டுவிட்டு குறிப்பிட்ட ஒரு நேரத்தை சொல்லி அதற்குள் அனைவரும் இந்த இடத்தில் வந்துவிட வேண்டும் என்று எச்சரித்து அனுப்பினார்கள்.
அனைவரும் அவரவர் விருப்பப்படி சென்று ரசிக்க ஆரம்பித்தனர் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.
ராகேஷ் கயலையும் மற்ற தோழிகளையும் அழைத்தான்.......மறுத்து நின்றாள் ஷீபா ஆனால் கயலின் முகத்தைப்பார்த்த அஜி அவளை வலுக்கட்டாயமாக அழைத்து அவனுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர் தனித்தனியாகவும் எடுத்துக்கொண்டனர்......இப்பொழுது ராகேஷும் கயலும் மட்டும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்கவேண்டுமென ராகேஷ் ஆசைப்பட்டதால் அவன் ஆசைக்கிணங்க அவனுடன் இரண்டு மூன்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டாள்.......கயலுடன் மிகவும் நெருக்கமாக நின்று புகைப்படங்கள் எடுத்தான் அவனது கைகள் கயலை இறுக்கமாக அணைத்துக்கொள்வது போல் இருந்தது ஆனால் கயல் அதை தடுக்கவில்லை இது ராகேஷ்க்கு ஒரு வெற்றியைப்போல் இருந்தது அது அவன் கண்களிலேயே தெரிந்தது.......!
சரி போதும் ராகேஷ் இனி பிறகு பார்த்துக்கொள்ளலாம்.....நீலமலையில் வைத்து உனக்கு ஒரு சர்ப்ரைஸ்டா ஒரு அழகான பரிசு தரப்போறேன் என்று சொல்லி அழகாய் ஒரு மெல்லிய புன்னகை கொடுத்து சந்திப்போம் என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள்.
என்னவாக இருக்கும் என்று குழம்பியபடி சரி பார்ப்போம் என கைசைகை சொல்லிவிட்டு அவனும் சென்றான்.
இங்கு முடித்துவிட்டு நீலமலையை நோக்கி புறப்பட்டது அனைத்து வண்டிகளும் இருவருமே தனி தனி வேன் தான் என்பதால் பெரிய அளவில் பேசிக்கொள்ளமுடியவில்லை எல்லாம் பிறகு நீலமலையில் பார்த்துக்கொள்ளலாம் என இருவருமே சென்றனர்.
தோழிகள் இருவரும் தனி இருக்கையிலும் இவள் தனி இருக்கையில் இடதுபக்கம் ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டு வெளியே இயற்கையின் அழகையும் அங்கு வந்து போகும் அந்த அழகிய பறவையினங்களையும் ரசித்துக்கொண்டேயிருந்தாள் கையில் ராகேஷ்க்கான அந்த பரிசையும் கடிதத்தையும் ஹேன்ட் பேக்கில் தன் மார்போடு அணைத்து வைத்துக்கொண்டு அந்த காட்டுப்பகுதியை ரசித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் கயல்.
அப்பொழுது ஒரு வளைவில் இவர்களுடைய வேன் திரும்பும் போது எதேச்சையாக அந்த பக்கம் பார்த்தாள் கயல்.......அங்கு அந்தக்காட்டுப்பகுதியில் அழகிய பூஞ்சோலை போன்ற ஒருசிறுபகுதி இருந்தது உள்ளே செல்வது போன்ற சிறு பாதையும் இருந்தது அதில் ஏதோ ஒரு பூவின் வாசமும் வந்து கொண்டிருந்தது அதை அப்படியே உள்வாங்கி கண்களை மூடி உணர்ந்துகொண்டிருந்தாள் கயல்.....
சிறிதுநேரம் கழித்து கண்களை திறந்தாள் கயல்!!என்ன ஒரு ஆச்சர்யம்!!!
ஆஹா!!தன் கனவில் வந்த அந்த அழகிய பாதை இங்கு இவள் கண்களுக்கு தென்பட்டது.காடு என்றாலும் இந்த இடம் மட்டும் சற்று வித்தியாசமாய் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பகுதி போல இருந்தது சற்று தொலைவில் அழகிய அருவி ஒன்றும் பறவைகளின் இரைச்சலும் இவளுக்கு நன்றாகவே கேட்டது.......இவர்களது வேன் மட்டுமல்லாமல் மற்ற வேன்களும் அந்த வளைவுப்பகுதிகளில் மெதுவாகவே நகர்ந்துகொண்டிருந்தது அதனால் அந்த இடங்களை அவளால் இன்னும் ஆழமாய் கொஞ்சம் நிதானமாய் ரசிக்க முடிந்தது சிறிது தூரம் சென்றதும் "நீலக்குயில்தேசம் செல்லும் வழி" என்று அம்புகுறியுடன் ஒரு போர்டு மாட்டப்பட்டிருந்தது அதை பார்த்ததுமே கயலால் இருக்கையில் நிதானமாய் இருக்கமுடியவில்லை உள்ளம் பரவசமானது.......அந்த பகுதியையே உற்றுக்கவனித்தாள் தொலைவில் ஒரு அருவி தெரிந்தது அந்த அருவியின் அருகில் பறவைகளோடு அந்தப்பக்கமாக திரும்பி நின்று உறவாடிக்கொண்டிருந்தான் ஒருவன்?????????
யாரவன்?என மனதில் யோசிப்பதற்குள்....."நிறுத்துங்க நிறுத்துங்க வண்டிய நிறுத்துங்க" என்று கத்திக்கொண்டே எழுந்து வண்டியின் வாசலுக்கு வந்தாள் கயல்.........
பாட்டும் ஆட்டமுமாய் களைக்கட்டிக்கொண்டிருந்ததால் இவள் சத்தம் பெரிதாக டிரைவருக்கு கேக்கவும் இல்லை..... அந்த இடத்தை கடந்து போகும் முன் எப்படியாவது வெளியில் அந்த நீலக்குயில் தேசத்துக்கு செல்லவேண்டும் என்ற மனவோட்டத்தில் வண்டியிலிருந்து குதித்துவிட்டாள் கயல்?? அந்நேரம் வண்டியும் நிறுத்தப்பட்டது கயலின் கைகள் அவன் நின்று கொண்டிருந்த அத்திசையை நோக்கி அவனை அழைப்பது போன்று சைகை செய்துகொண்டிக்க அவள் கண்களோ மெல்ல மெல்ல சுயநினைவை இழந்து மூடிக்கொண்டிருந்தன......?
கயலின் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாத்தா ஏதோ ஒரு பயங்கரமானக்கனவு கண்டு பயத்தில் எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு வீட்டிலுள்ள யாருக்கும் தெரியாமல் கயலுக்கு அழைப்பைக்கொடுத்தார்............
தொடரும்.......!