புரியாத புலம்பல்
எழுத தோன்றுகிறது எழுதுகிறேன்.
ஒருமுறை தொலைக்கட்சியில் ஒருவர் பேசுவதை கேட்டேன். அவர் கூற்று இதுதான் " நான் தினமும் காலையில் வாக்கிங் போகும் போது
தினமும் ஒருவர் நன்றாக டிரஸ் செய்து கொண்டு வருகிறார் அவரது கையில் ஒரு பாலீதின் கவர் இருக்கிறது
மறுதினம், அவரிடமும் ஒரு கவர் உள்ளே பால் பக்கெட். டெய்லி இவ்வளவு உபயோகப்படுத்துபவர்கள் அவர்களே. அவர்கள் படிக்காத பாமரர்களா?
அவர்களுக்கு பிளாஸ்டிக் இன் தன்மை பற்றி தெரியாதா?.இருந்தும் அவர் அதை தொடருகிறார்." இவ்வாறு அவர் உணர்ச்சி பெருக்குடன் கூறினார்.
அவரது கூற்றுக்கு முன்னரே நான் பலமுறை யோசித்து உள்ளேன்.. அவரது வார்த்தைகள் என்னை எழுத வைத்துவிட்டன இங்கே நாம் எவ்வளவு புறக்கணிக்கிறோம் என்று யோசித்து பாருங்கள். " பெண்கள் கற்பழிப்பு " இது ஒரு பழக்கப்பட்ட வார்த்தையாகி விட்டது அனைவருக்கும். ஆனால் இது வரை எவரும் அதன் காரணமென்ன? அதன் முழுமையான தீர்வுக்கு வழியென்ன என்பது பற்றி எவரும் பேசுவதில்லை.. "சே.. என்னப்பா இப்படி பண்றாங்க.. அவங்களை எல்லாம் துடிக்க துடிக்க தூக்குல போட்டு " என்று பேசிவிட்டால் போதுமா ???
நண்பன் ஒருவனிடம் கூறுகிறேன்.. " தனியார் பள்ளியில் ஆசிரியர்களே வினாத்தாள் மாற்றி அகப்பட்டு விட்டனர் என்று."
அவனது பதில்.. " ஜி.. நீங்க இப்படிலாம் சொல்லறீங்க.. ஆனா பிசினஸ் படி பாத்தா அது எவ்ளோ பெரிய பிசினஸ் தெரியுமா.. அதெல்லாம் அவங்களுக்கு நியாயம் தான்.. " அவனிடம் ஒரே ஒரு கேள்விதான் " இந்த சமுகம் எப்படி போனாலும் உங்களுக்கு கவலை இல்லனா நீங்க தனியா யாருமே இல்லாத தனிதீவுக்கு போய்ட வேண்டியது தான"
அப்புறம் இன்னொரு விஷயம், மாணவர்கள் ஏன் இப்படி இருக்காங்க நு கேட்டா " நமது கல்வி முறை சரியில்லை. கத்து கொடுக்க கூடிய வழிமுறைகள் சரியில்லை. " என்பது மட்டுமே அது பற்றிய கருத்தாக அமைந்துள்ளது.
ஒரு கிராம துவக்க பள்ளியில் நூறு மாணவ மாணவிகள் பள்ளியிலே படித்தால் இறுதியில் பட்டபடிப்பு முடித்து வெளியே வருபவர்கள் 10 பேர் மட்டுமே.. இது நான் என் வாழ்கையில் எனது கிராமத்தில் கண்டது. இதில் உள்ள மீதி தொண்ணூறு பேருக்கும் பணம் மட்டுமேவா தடையாக இருந்திருக்கும்? இதுதான் என்னுடைய கேள்வி?