வானம் சிவந்தென்ன

விண்வளரும் விண்மீன்கள் வேண்டினும் கைவருமோ?!
மண்முழுதும் தேவதைகள் வாய்ப்பாரோ? -பெண்மக்கள்
கண்விழியைப் பார்த்தவராய்க் காலத்தை ஓட்டிடவோ?
மண்ணுய்யப் பாடல் மதி!

அல்லிவட்டம் போடுகின்ற ஆசையின் கண்களின்பின்
புல்லிவட்டம் போடுவதேன் பொய்நெஞ்சே! -மில்லிவட்டம்
போட்டழியும் மாந்தரினைப் போய்ப்பார்த்த பின்னருமேன்
கூட்டழிப்பைத் தேடுகிறாய் கூறு!

கண்களால் இல்லை கனவுகளும்! அச்சுமையும்
கண்மூட ஏக்கங்கள் கட்டவிழ்க்கும் - பெண்மானின்
முன்வந்த பொய்மான் முகங்களே! போய்விழுமுன்
பின்வந்த தெண்ணியே பார்!

வாய்மை சுழற்சியோ? வையமதன் கைப்பிள்ளை
ஆய்வரல் உண்மையும் ஆகுமோ?- பாய்மரம்
சுற்றினால் போமோ சுழலும் படகு,கரை!
பற்றினோர்க் கென்றும் பயம்!

வானம் சிவந்தென்ன வாய்சிலிர்த்துப் பூவடிக்கும்
தேனும் சுவைத்தென்ன, தேடார்க்கு?

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (24-Mar-15, 10:33 am)
பார்வை : 109

மேலே