உழைக்கும் கரங்களிது

..."" உழைக்கும் கரங்களிது ""...

விடியும் விடியுமென்றே
கதிரவனை காத்திராது
கடமை கடமையென்றே
நித்தம் உழைத்த கரங்களிது !!!

வியர்வையை உடையாக்கி
வீண்பேச்சை முடமாக்கி
வேகமத்தை முறையாக்கி
காயங்களை பரிசாக்கி !!!

விடிய விடிய உழைத்தும்
விளைச்சல் வீடு சேரவில்லை
உழைக்கும் சின்னமானேன்
ஒட்டிய வயிறோடு !!!

பிச்சை பாத்திரம் ஏந்துவோர்
மத்தியில் வலிகளை
துச்சமாக்கி அச்சமில்லாதே
அயராதுழைக்கும் கையிது !!!

உலகின் உந்துசக்த்தியாம்
உழைத்து உருக்குலைந்த
கடமை கரல்படிந்த கைகளை
அலங்கரிக்க வலக்கரம் !!!

வர்ணனை துணைசேர்த்து
வாழிய வாழியவென
ஆயிரம் கவிபடைத்தாலும்
தீராது தீராது தீராதேன்பேன் !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (24-Mar-15, 5:08 pm)
பார்வை : 420

மேலே