கவிதைத்துளிகள்------------நிஷா

விரல்களைத் தழுவி
விரலிடையில் நுழைந்து
விடியல் தரத்துடிக்கும்
சில
விசித்திரப் பூக்கள்....
என் கவிதைத்துளிகள்.....
கற்பனை வானில்
காவியம் படைத்து
கரைந்திடத் துடிக்கும்
சில
கனவுப் பூக்கள்....
என் கவிதைத்துளிகள்.....
உதட்டோரம் உருகி
உயிரோடு கலந்து
உணர்வோடு சங்கமிக்கும்
சில
உரிமைப் பூக்கள்...
என் கவிதைத்துளிகள். ..
இமையோடு உரசி
இதயத்தை உருக்கும்
இனிய நினைவை சுமக்கும்
சில
வாடா மலர்கள்....
என் கவிதைத்துளிகள். ...