காதல் வலி
நினைவுகள் கூட
கண்ணீர் சிந்தியது
உன்னை நினைக்கும் போது
பெண்ணே இந்நொடி
என் இதயம் கூட
கண்ணீர் சிந்துகிறது
நாம் வாழ்ந்த நிமிடங்கள்
ஞாபகம் கொண்டதாலடி
எப்படி இணைந்தோம் அன்பே
இன்னும் எனக்கு விளங்கவில்லை...
எப்படி பிரிந்தோம் கொஞ்சம் கூட
உனக்கு இரக்கமில்லையடி
பெற்ற தாய் இறந்தால் வரும்
சோகத்தைகூட ...
இன்று உன் வேஷத்தால்
உணர்ந்தேனடி
பூக்களை விட மென்மையாய் இருந்த
உன் வார்த்தைகள்...அன்று
என் இதயத்தை மட்டும்
என் நெருப்பை விட கொடூரமாய்
எரித்ததடி
அந்த நிலவை விட
பிரகாசமானவள் அடி நீ...
இருந்தும் என் அடி பறித்து விட்டாய்
என் வாழ்வின் ஒளியை
மறந்து வாழ்வது உனக்கு
என்னமோ புதிதாய் இருக்கலாம்....
அன்பே உன்னை நினைத்து
வாழ்வது எனக்கு என்னமோ என்றும்
இதமாய்தான் இருக்கின்றதடி
காலங்கள் நிற்காதடி
என் காதலும் தோற்காதடி
உயிர் நீ பிரிந்தாலும் உடல் நான் வாழ்வேனடி
.உலக இன்பங்களுக்காக அல்ல
என் உயிர் காதலி
உன்னை நிழலாய் காக்க