தாரத்திடம் நான் கேட்கும் தானம்
காதலித்தோ.....பெரியோர்களால் .....
நிச்சயிக்கப்பட்டோ........
மூன்று முடிச்சு போடவுள்ள....
தாரத்திடம் நான் கேட்கும் தானம்......
தாம்பூலம் மாறுவதற்கு முன்.....
தனியா பேச....தனிமைக்கு அழைக்கனும்....என்னை.......
வாடி'னு சொல்ல....
வாய்ப்பளிக்கனும் .....என் வாயிக்கு...
கடைத்தெரு போகையில.......
கைப்பிடித்து நடக்க....
அனுமதிக்கனும்.....கண் இமைத்து.....
கைப்பேசி பேசுகையில.......
கொஞ்சம் சினுங்கள்கள்...
சிறு சிறு சண்டைகள்....நடுவில்...
சிறு சிறு முத்தங்கள் .....
சிக்னல் வழியே.....என் செவி சேரனும்..
மணமேடை வருகையில.....
மஞ்சள் பூசி.....கூரைபுடவை உடுத்தி..
பூமாலை சூடி ...
கொஞ்ச தூரத்தை ....கொஞ்ச கொஞ்சமாக.நடந்துவா ....
மணமகளே......உன் வருகையை ...
மணமகிழ பார்க்கனும்.....
மக்கள் மத்தியில்.....
மத்தளங்கள் முழங்க......
ஈர மஞ்ச கொடியை .....இழுத்து கட்ட...
தாமதிக்காமல் ....தலைகுனிந்து ....
என் தாரமாகிவிடு.........
உன் பாதம் தொட.....
ஒரு பாக்கியம் கொடு.....
மெட்டி அணிய.....உன் கால் விரலில்...
திருமகளே....திருவிளக்கு ஏற்ற...
திருக்கோவில் போன்ற ......
என் வீட்டுக்கு வாடி......
தாரமான உன்னை.......
தாம்பத்திய வாழ்க்கைக்கு......
தாங்கி செல்ல......தலை அசைத்து...
அன்பு கட்டளையிடு........
ஆம்...
கன்னி வேடம் களைத்து.....
கனவன் மனைவி வேடம்.....போடுவோம்........
துயில் எழ...
உன் கூந்தல் துவட்டலில்...
சிதறி ....சிந்தும்....துளி..நீர்த்துளிகள்...
மௌனம் நிறைந்த காலையில்....
மந்திரம் போல்......
மெதுவாக ஓது...மாமா என்று..........
நான் கண் முழிக்க.....
அனல் பறக்கும்....
அதிகாலை உணவு...
அனலை குறைக்க.....
அன்பாய் பேசி ..பரிமாற...
நீ ....இருந்தால் போதும்...என் அருகில்......
உதட்டு எச்சிலால் ......
என்னை ஈரமாக்கு....
விடை பெற்று.....
வீடு திரும்புவேன்....
ஈரம் காய்வதற்கு முன்....பணிக்கு சென்று.......
தாயிடம் கிடைக்கும்...
எல்லா சுகமும்...
உன்னிடம் எதிர்பார்க்கிறேன்...
இது தான் தற்போதைக்கு .....
கேட்க உள்ளது........