அகதி
மனதில் எழுந்த எண்ணங்களை
சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கின்றேன்..
ஈழத்தமிழனான எனக்கு இந்த வாழ்க்கை
அதன் முக்கியத்துவத்தை நன்றாகவே எடுத்துக்கூறி விட்டது
கடந்த 24 ஆண்டு அகதி வாழ்க்கை..
பிறப்பால் ஈழத்தமிழனான நான்...
4 வயதில் இருந்து வாழ்ந்தது என்னவோ
இந்த தமிழக மண்ணில் தான்.
அடிப்படை தேவையின் அவசியம்
அவையில்லாமல் வாழும் பொழுது தான் தெரிகின்றது.
கல்நார் (யளடிநளவழள) குடில் தான் எங்கள் வீடு..
கொளுத்தும் வெயிலின் வெக்கையில் சிக்கி வெந்துகோன நாங்கள்...
இன்னும் உயிருடன் தான் இருக்கின்றோம் அகதிகள் என்ற பெயரில்.
சுத்தமும் சுகாதாரமும் பெயரளவில் மட்டுமே
கேட்டு பழகிப்போன எங்களுக்கு
அது என்றுமே கிடைப்பதில்லை இங்கு..
ஒரு வேளையாவது நிம்மதியான வாழ்க்கை வாழ தகுதியில்லாதவர்களா நாங்கள்?..
என்ன தவறு செய்தோம் நாங்கள்? இந்த வாழ்க்கையை பெற..