அரசு அலுவலகங்களில் பினாயில் வேண்டாம் - கெலினை பயன்படுத்துங்கள் - மேனகா காந்தி அவர்கள்
அரசு அலுவலகங்களில் பினாயில் வேண்டாம் - கெலினை பயன்படுத்துங்கள் - மேனகா காந்தி அவர்கள்..!
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தனது அமைச்சரவை சகாக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
உங்கள் அலுவலகங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்டு வரும் பினாயிலுக்கு பதிலாக கோமியத்தால் செய்யப்படும் கௌனிலை பயன்படுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.
பினாயிலில் கேடு விளைவிக்கும் ரசாயனம் உள்ளது.
ஆனால் கௌனிலில் ரசாயனமே இல்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஹோலி கவ் பவுன்டேஷன் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு கோமியத்தால் ஆன கௌனிலை விற்பனை செய்து வருகிறது.
இனி வரும் நாலு சொச்சம் வருசமும் இது மாதிரி கிளம்பிக்கிட்டே இருப்பாங்களோ....? சரி போகட்டும்....
ரசாயன சமாச்சாரத்தையும் விட்டு விடுகிறேன்....
இந்த பினாயில் சமாச்சாரத்தில் நமக்கு வரும் டவுட்டு..... ரெண்டே ரெண்டு தான்...
ஒன்று - இந்த ஏழாயிரத்து எண்ணூறு சொச்சம் கம்பனிகளில் எத்துனை உங்க க்ரூப் கம்பனி....?
ரெண்டு - எத்துனை வெளிநாட்டுக்கார பயல்கள் கம்பனி...? என்பதுதான்...
- சங்கிலிக்கருப்பு -