முந்திய நொடி

எங்கிருந்தோ ஓர்
ஓசை வெளிப்பட்டு
வாய் வழியே வெளியெரிப் போகும்

இறைச்சி
கீரை
தானியம் முதல்
தயிர்வரை ஒன்றாய் சேர்ந்து
ஊர்வலம் நடததுவதாய் தோன்றும்

புவி தன்
ஈர்ப்பு விசையை
கைவிட்டு
எதிர்ப்பு விசையை வெளிப்படுத்தும்

ஓர் அணுகுண்டு
தாக்குதல் ஓய்ந்து போனபின்
நாசியை சிதைக்கும்
நச்சு வாயு
சுவாசத்தில் கலக்கும்

எதிர்ப்பாரா சந்தர்ப்பங்களில்
வரும் தும்மால்களை
தடுப்பது போல்
கைகள் வாயின்
துணைக்கு விரையும்

மூலையில் ஓர் கலக்கம்
உண்டாகி
சிந்தனை மாற்றத்திற்கு
விண்ணப்பம் கோறும்

காணல் நீர் போன்ற
கண்ணீர் துளிகள்
மெல்ல
மெல்ல
உருவம் பெற எத்தநிக்கும்

மனம் தண்ணீரை மட்டுமே
யாசிக்கும்

இது வாந்திக்கு முந்திய நொடி

எழுதியவர் : அஸ்லம் அஹமட் (25-Mar-15, 5:13 pm)
பார்வை : 78

மேலே