இந்தியா வாழ்க

தீவிரவாதிகளின் ரகசிய கூட்டம் நடு இரவில் நடந்து கொண்டிருந்து.

அவர்களின் தலைவன் "5 நாடுகளில் இருந்து பெரிய சைண்டிஸ்ட் கலந்துக்கற கூட்டம் இன்னும் ஒரு வாரத்துல அமெரிக்காவுல நடக்க போகுது.... இது வெளில்ல உள்ள நாடுகளுக்கு தெரியாம நடக்குற ரகசிய கூட்டம். அந்த 5 பெரிய சைண்டிஸ்ட்களை நாம கொனுட்டோம்ம்னா திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி வெளிய சொல்ல முடியாம அலறுவானுங்க. அவனுங்க அலறணும்.... நாம பாத்து சிரிக்கணும்... இந்த திட்டத்துக்கு பேரு ஆபரேஷன் 5 . இதை சக்சஸா பண்ண வேண்டியது நாம 5 பேரும். ஓகே ." என்று முடித்து. ஒவொருவரும் கை குலுக்கி கொண்டு சிரித்தபடியே சென்று மது அருந்த தொடங்கினார்கள்.

குறிப்பிட்ட நாளில் அமெரிக்காவின் பெரிய கட்டிடத்தில் அமைந்திருந்த 5 ஸ்டார் ஓட்டல் ஒன்றின் கீழ் தளத்தில் அந்த 5 பெரும் கூடி இருந்தார்கள். உலகின் பெரிய நாடுகளின் மிக பெரிய சைண்டிஸ்ட் அவர்கள்.

அவர்களில் ஒருவர், "நாம இங்க எதுக்கு கூடி இருக்கோம்னு யாருக்காவது தெர்யுமா?" என்று கேட்க,

"நம்ம நாடோட அறிவியல் மற்றும் எல்லா துறைகளிலும் எப்படி டெவலப் பண்றதுன்னு டிஸ்கஸ் பண்ணதானே" என்று மற்றொருவர் கூற,

அவர் சிரித்து கொண்டே ."நோ" நம்ம எல்லோருக்கும் பெரிய இடியா டெவலப் ஆகி வந்து கொண்டிருக்கிற இந்தியாவை எப்படி தடுக்கணும்னு டிஸ்கஸ் பண்ணி. இப்பவே அதுக்கான முடிவை எடுக்கத்தான் இங்க கூடி இருக்கோம்" என்று சொன்னதும்.

ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் சந்தோசம் அவர்களை தோற்றி கொள்ள.

"எஸ்" நாம உடனடியா இதுக்கான ஐடியாவை டிஸ்கஸ் பண்ணியாகணும் என்று கோரசாக சொன்னார்கள்.

முதலில் ஒருவர், " இந்தியாவோட மக்கள் தொகையை உடனே குறைக்கணும், அதுக்கு எங்ககிட்ட வைரஸ் கிருமி ஒன்னு இருக்கு. அதை இந்தியாவுக்குள்ள பாஸ் பண்ணிட்டா உடனே மக்கள் கொத்து கொத்தா சாக ஆரம்பிச்சிடுவாங்க.. எல்லா வகை டெஸ்டும் ஓகே ஆய்டிச்சி. என்ன சொல்றிங்க பாஸ் பண்ணிடலாமா" என்று சொல்ல,

இன்னொருவர், "அதனால இந்தியாவுக்கு கெட்டதோ நல்லதோ ஏன்னா கொஞ்சம் கொஞ்சமா நம்ம நாட்டுக்கும் பரவிடும். சோ அது வேண்டாம். வேற?"

"இந்தியர்கள் உணவு பிரியர்கள்.. அதனால அவங்க சாப்பாட்டுல விஷம் கலந்து கொஞ்சம் கொஞ்சமா கொடுக்க வழி பண்ணலாம்.. " என்று ஒருவர் கூற,

"இந்தியர்களோட மூளையை மழுங்க செய்யற மாதிரி மெடிசின் கண்டு பிடிச்சி அவங்களுக்கு கொடுக்கணும். குறிப்பா புதுசா பிறக்கிற குழந்தைகளுக்கு கொடுக்கணும். அதுங்க வளர வளர மூளை மழுங்கி புத்தி இல்லாம போனா எதிர்கால இந்தியா நமக்கு அடிமைதான்." என்று சிறிது கொண்டே சொல்ல,

"மிஸ்டர் சைண்டிஸ்ட், இந்தியாவில இப்ப இருக்கிற சைண்டிஸ்ட் உடனே கண்டுபிடிச்சி அதுக்கு மாற்று மருந்து உருவாகிடுவாங்க." தெர்யுமா. என்று சொல்ல,

"நம்மளோட கண்டுபிடிப்பை வச்சி இந்தியாவில இருக்கிற ஆறு, கடல் போன்றவற்றில் வெள்ளம் வர வச்சி அதுல அழிச்சா என்ன...?" என்று ஒருவர் சொல்ல,

"அதெல்லாம் வேண்டாம், இந்தியாவில நாட்டுக்காக வாழற அரசியல் வாதியை விட காசுக்காக வாழற அரசியல்வாதிங்க அதிகம்னு கேள்வி பட்டு இருக்கேன். சோ. அவங்களை விலைக்கு வாங்கணும். அவங்க கையை எடுத்து அவங்க கண்ணை குத்தனும்... அதனால நம்ம நாட்டுக்கு உலக அளவில் எந்த பிரச்சனையும் வராது. ஓகே வா. " என்று ஒருவர் கூற அனைவரும் பலமாக கை த்தட்டி சிரித்தனர்.

"எஸ். நம்ம பணத்தை கொடுத்து யாராவது ஒரு அரசியல்வாதி பேர்ல இந்தியாவில சாடிலைட் கனக்ஷன் வாங்கிடலாம். அது மூலமா வேற வேற கதிர்கள மிக்ஸ் பண்ணி இந்தியன் ஒவோவோருவனோட காதுலயும் நுழசிடலாம். முதல்ல காது வலி வரும். அந்த வலி மூளையை போய் தாக்கும். ஒரு வாரம் தான் ஆள் அவ்வளவு தான்.

இந்தியாவோட எந்த சைண்டிஸ்ட், நினைச்சாலும் அந்த ரேசை குறைக்க முடியாது. yeppadi ஐடியா " என்று முடிக்க அந்த ரூம் முழுக்க கை தட்டல்.

கை தட்டல் இடையே கதவு தட்டப்படும் சத்தம் கேட்க கண்ணாடி வழியாக பார்த்து . "ஓகே. டின்னேர்க்கு ஆள் வந்திருக்கு யாருக்கு என்ன தேவையோ சொல்லுங்க" என்று சொல்லி கொண்டே கதவை திறக்க. சாப்பாடு கொண்டுவந்தவனோடு இன்னும் 4 பேர் சரசர என்று உள்ளே வந்து துப்பாகியால் அவர்களை சரமாரியாக சுட்டு தள்ளினர்.

5 பேரும் மறு வார்த்தை பேச முடியாமல் மடிந்தனர். இதை தெரிந்து கொண்டு போலீஸ் அந்த அறையை சூழ்ந்து தீவிரவாதிகள் 5 பேரையும் சுட்டு தள்ள 10 பேரும் அங்கே சடலமாக கிடந்தனர்.

மறுநாள் நியூஸ் பேபரில் "5 நாடுகளின் அறிவியல் மேதைகள் மரணம் குறித்து இந்திய பிரதமர் இரங்கல் என்றும். இந்த வன்முறை கண்டிக்க தக்கது என்றும் பேட்டி கொடுத்து இருந்தார் அவர்கள் கூடியதற்கான காரணம் தெரியாமல்.

எழுதியவர் : sujatha (25-Mar-15, 6:25 pm)
Tanglish : indiaa vazhga
பார்வை : 242

மேலே