ரயில் சினேகிதம்
நீங்க
எங்க போகணும்
என்பதில் ஆரம்பித்து...
வாழ்க்கை பயணத்தில்
எங்கே பயணித்து கொண்டுஇருக்கிறோம்
எதை நோக்கி பயனிக்குறோம் ,
என்பது வரையாக
எல்லாவற்றையும் பரிமாறிவிட்டு ..
எனக்கான எல்லை வந்துவிட்டது
இறங்க போகிறேன் - மறக்காமல்
நேரம் கிடைக்கும்போது அழையுங்கள் ..
என்று சொல்லி பயணத்தோடு
நட்பையும் முடித்துகொள்கிறோம்..!