தோள் அவன்

நண்பன் என்றால்
நம் தோள் அவன்
அவன் இல்லை என்றால் இவனும் இல்லை
ஒருவர் இதயத்தில் ஒருவர் நட்பில்
ஒருவர் வலி ஒருவருக்கு புரியும்
தனக்காக அன்றி நண்பனுக்காக
வாழ்வதே நட்பின் அடையாளம்
நட்பில் சுயநலம் இல்லை
போட்டி இல்லை பொறாமை இல்லை
உயிர் கொடுக்கவும் தயங்க மாட்டான்
உண்மையுள்ள நண்பன்
அவன் நேசம் இவன் பாசம்
நல்ல நட்புக்காக ஏங்குவோர் பலர்
நல்ல நண்பன் கிடைத்து விட்டால்
அவன் வாழ்வில் தோல்வி இல்லை
ஒரவர் பற்றி அறிய உதவும் பாலம் நட்பு
நண்பனைப் போல் அன்னையும் உண்டு
அன்னையைப் போல் நண்பனும் உண்டு
நண்பனே நண்பனுக்கு அன்னை ஆவான்
அன்னையின் அன்பு நட்பின் அகராதி