எனக்கென்று ஒரு பிரபஞ்சம் உண்டு

வானவில்லை தொட்டுப் பார்த்தேன்
வந்தது கையிலே வண்ணங்கள் - தமிழ்
வார்த்தைகளை நான் கோர்த்துப் பார்த்தேன்
வந்தது இனிதாய் கவிதைகள்....!!

புதுமைகள் தேடி நினைவுகள் அலைய
புத்துணர்வாய் என் வாழ்க்கையே - அதில்
புலம்பி அழவும் நேரம் இல்லை ஊரார்
புகழை எதிர்நோக்கி நானும் இல்லை...!!

பழிப்பவர் பழிக்கட்டும் அது அவர் பழக்கம்
படிக்கிறேன் அனுபவம் அது என் பழக்கும்
பட்டது யாவும் பாடங்கள் ஆனது தினம்
பகலும் இரவும் என் உறவுகள் ஆனது.....

தனிமைச் சிறையில் இருந்த போது

வானவில்லை தொட்டுப் பார்த்தேன்
வந்தது கையிலே வண்ணங்கள் - தமிழ்
வார்த்தைகளை நான் கோர்த்துப் பார்த்தேன்
வந்தது இனிதாய் கவிதைகள்....!!

எழுதியவர் : ஹரி (27-Mar-15, 1:33 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 99

மேலே