மனைவி
மனையை விளங்கச் செய்பவள்
மனைவி!
தூணாய் துயரிலே
தோள் கொடுப்பவள்
துணைவி!
இல்லத்தை
நல்லறத்துடன்
ஆட்சி செய்பவள்
இல்லாள்!
உன்னை ஆட்டி வைப்பதால்
பெண்டாட்டி!
புனிதங்களை காப்பவளே
பத்தினி!
பாரங்களை தாங்குவதால்
பாரியாள்!
இன்பங்களை பங்கிடுவதால்
தாரம்!
குடும்பத்தின் சாரம்
சம்சாரம்!