துணை
துணை என்பது
ஒவொருவருக்கும்
தேவையான ஒன்று.
துணை என்பது
வாழ்க்கைக்கு
கட்டப்படும் அணை.
சுகங்களை பகிர்ந்து கொள்ளும்
துணையை விட
சோகங்களை பகிர்ந்து கொள்ளும்
துணையே சிறந்தது.
துணை என்பது
சந்தோஷத்தில் படிகள்.
துணை என்பது
கவலையை மறக்ககூடிய
கலை.
கவலை இல்லாத மனிதரும்
துணை இல்லாத மனிதரும்
இருவர் மட்டுமே இருக்க முடியும்
ஒருவன் கருவறை உள்ளே....
இன்னொருவன் கல்லறை உள்ளே ....
பிரிவு என்பது
யாராலும் மறுக்கமுடியாத வலி
துணை என்பது
யாராலும் திருட முடியாத
பொக்கிஷம்..