கட்டில் பாகபிரிவினை

மார்ச் மாதம்..
பணிசுமை அதிகமாகியது அவனுக்கு
அவளுக்கோ தனிமை எண்ணம் கூடியது
பணிசுமை காரணமாக அவள் சொன்ன பணியை மறந்தான்...

சண்டே அன்று சண்டை வந்தது
பல மணிநேரம் அவன் எடுத்து கூறினான்
ஏற்றுகொளுமாறு இல்லை ...
உணவும் உயிர் இல்லாமல் இருந்தது அன்று ...

மதியமோ மயக்கம் இல்லாமல் கலகத்துடன் போனது ...
அன்று பல முறை அலுவலகம் தொடர்பாக பல அழைப்புகள் வந்தன ...
அவன் மீதும் தவறு இல்லை ...
ஆனாலும் அவன் அதனை மறந்துருக்க கூடாது..

கன்னியவள் மனம் துடித்து போயிருந்தது ஏமாற்றத்தால் ...
மாலையும் வந்தது வேண்டா வெறுப்பாக ...
இறுதியாக மனிப்புகேட்டு கொண்டான் ...
இரவு உணவு கட்டாயத்தில் முடிந்தது ..

அவள் எதையும் ஏற்றுகொள்வதாக இல்லை ..
அவனும் மனம் தளர்ந்து போனான் ...
படுக்கையறை சென்றான் ...

படுகையில் இரண்டாக கோடு போடிருந்தது ...
அவள் சொன்னாள்
இது தண்டனை உங்களுக்கு..
அபோதுதான் என்னை மறக்க மாட்டிர்கள் இனி என்று..

"வலப்புறம் எனக்கு வலப்புறம் உங்களுக்கு என்றாள்...!"
அவனுக்கு புரிய வில்லை ..மீண்டும் கேட்டான் ..

தண்டனை உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன் ... :)

(ஏதோ தோன்றியதை கிறுக்கி இருகிறேன் ... இதனை எதில் வகை படுத்த என தெரிய வில்லை )

எழுதியவர் : S R JEYNATHEN (28-Mar-15, 6:32 pm)
பார்வை : 456

சிறந்த நகைச்சுவைகள்

மேலே