முதல் காதல்

காதல் உறங்கியதும் இல்லை காதலிப்பவர்களை உறங்க விட்டதும் இல்லை
நீ என்னை பார்த்து சிரித்த நொடிகளும் நான் உன்னை பார்த்து ரசித்த நொடிகளும் அப்படியே நின்று விட்டன காதல் கடிகாரத்தில்
ஒரு கண் சிமிட்டலில் என் காதலை ஒப்புக்கொண்டாய் நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் என் இதயம் பறித்து

இதோ நீ செல்லும் பேருந்து வந்து விட்டது
நீயும் சென்றுவிட்டாய் .
வருடங்களும் ஓடி விட்டன . ஆனால் இப்பொழுதும் பேருந்தை பார்க்கும் பொழுது உன் நினைவுப் பயணம் தொடர்கிறது.......

எழுதியவர் : (30-Mar-15, 11:42 am)
Tanglish : muthal kaadhal
பார்வை : 55

மேலே