என்னவனாய் இருப்பாயோ

என்னவனாய் இருப்பாயோ

உன் குலம்
தழைக்க வேண்டும் என்று
குடுசைக்குள்ளே அமர்ந்தவள் நான்...
உன் மூன்று முடிச்சி
சுமந்து கொள்ள
மாதம் தோறும்
மூன்று நாளை
சுமைகளுக்கு சுகமாய்
தாரை வார்த்தவள் நான்...
நீ எங்கே இருக்கிறாய்
என்று தெரியாமலே
உன் ஆயுளுக்காய்
நெற்றியிலே திலகமிட்டு
பூச்சூடி கொண்டவள் நான்...
என்னவன் உனக்காய்
உன் முகம் பாராமலே
என் பெண்மையை
பொக்கிஷமாய் அடை
காத்துகொண்டிருப்பவள் நான்...
இத்தனை செய்தும்
என்ன பயன்
நீயோ என்னை
வரன் பார்க்கவே
தட்சணை கேட்கிறாய்....
இன்றும் வர போகும்
உனக்காக நான்
என்னை அலங்கரித்துகொண்டிருக்கிறேன்
நீ என்னவனாய் இருப்பாயோ
என்ற சந்தேகத்திலே....

எழுதியவர் : இந்திராணி (30-Mar-15, 11:43 am)
பார்வை : 81

மேலே