சமநிலை சமுதாயம் உருவாகட்டும்

இமையாய் இல்லங்களைத் தாங்கிடும் இதயங்கள்
சுமையாய் குடங்களை தூக்கிடும் வலிமிகுகாட்சி !
பசுமையோ மறைந்து பஞ்சமிங்கே ஒருதுளிநீருக்கு
பகைமையே நிறைந்து பஞ்சமிங்கே ஒற்றுமைக்கு !

வறண்டன நெஞ்சங்கள் வறண்டிட்ட பூமியாய்
சுரந்திடும் மண்ணில் சுரண்டிடும் மனிதர்களே !
வாழும் உயிர்களுக்கு உதுவுவார் எவருமில்லை
வழிவகை செய்திட முன்வருவார் யாருமில்லை !

நதிகளும் இணையாது இதயங்களும் நிறையாது
நாதியற்ற நம்நிலையும் நானிலத்தில் தெரியாது !
வீதிகளில் வாழ்பவன் வீடுகளில் வாழவேண்டும்
விதியென்று பேசுபவன் மதியால் மாறவேண்டும் !

அடிப்படை தேவையை ஆள்பவர் உணர்ந்திடுக
அடியிறுதி மனிதர்வாழ வழிவகை செய்திடுக !
சமநிலை சமுதாயம் மலர்ந்திட பணியாற்றிடுக
சாமானிய மக்களையும் உயர்த்திட எண்ணிடுக !


​ ​பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (30-Mar-15, 2:57 pm)
பார்வை : 311

மேலே