என் அம்மா
வளாகத் தேர்வில் தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துபவர்களுக்கு மத்தியில், ஆனா ஆவண்ணா அரைகுறையாய் எழுதியதற்கே ஆர்பரித்தவள் என் அம்மா !
சென்னைக்கு மிக அருகில் ஆடம்பர பங்களாவில் தூங்கினாலும், என் வாழ்வின் சிறந்த படுக்கையான என் தொட்டிலை தன் சேலையில் கட்டியவள் என் அம்மா !
அந்நிய மொழி பேசுவது அறிவு என்றிருப்பவர்கள் மத்தியில் , நான் தாய்மொழி தவறாக மழலையில் பேசியதற்கே சுற்றி போட்டவள் என் அம்மா !
எனக்கு பிடிக்காத உணவை உண்ணாமல் இருந்தால் காதலி , எனக்காக பிடித்த உணவையே உண்ணாமல் இரத்தத்தை உயிராக்கி உணவாக்கியவள் என் அம்மா !