மயானம் பேசுகிறது-தாயை அனாதையாய் அலையவிட்டவன்
இதுத்தனிமைக்காடு!இங்குவந்தவரெல்லாம்மீண்டு போனாதாய்சரித்திரம் இல்லை...
என்னைமன்னித்துவிடு தோழா!
நீ,உன் தாய் மடியில்வாங்கிய முத்தங்களெல்லாம்,
மென்றுத்தின்னமுடியாத,
வாய்க்கரிசியாகவும்மாறும்..
.என்னைமன்னித்துவிடு தோழா!
தாய்க்குக்கொள்ளிவைக்க,
நீவேண்டும் தோழா!உன்னால்முடியாவிட்டால்
உனக்குக் கொள்ளிவைக்க,
நான் போதும் தோழா!
அன்று உனக்காக
செத்துப் பிழைத்தாள்!
இன்றுஏன் பிழைத்தோம்
என்று செத்தாள்தோழா!
அழுததைவிட
அதிகமாய்ச்சிரித்தாள்அன்று....
அதிகமாய்ச்சிரித்ததைவிட
அதிகமாய்ச்சிரிக்கப்படுகின்றாள்
இன்று....
நியாயம்அநியாயம்எழுதப்படாத
அத்தியாயம் நான்தோழா!
ஆத்தங்கரைவீட்டு
அடுப்பெரிக்கஆளில்லை..
அதனால்,உன்மகனை
இங்குஅனுப்பிவை...
அவனுக்குதாயருமையை
சொல்லிவளர்க்கிறேன்.
சொல்லிப்புரியாவிட்டால்
அவனையும்அள்ளிஎரிக்கிறேன்..
நூற்றில்ஓர்நூலென்று
நூதனமாய்உன்னை நூற்றிட்டாள் தோழா...
ஆனால் நீயோ.சேற்றில் செய்தசெங்கல்சூளைக்கு
அவளைவிலை
பேசிவிட்டாய் தோழா!
பூரான்வேகமாய்,
உன்னைபுதைப்பார்கள் தோழா...
ஆனால் நீயோ,
புலியின் வேகமாய்எரிந்து முடிவாய்தோழா!....
பனிக்குடம் காயம்பட்டுஅவள் கருவரையும்வெடித்திருக்கும்..
உன்னால்அதையும் பொறுத்துக்கொண்டு
பள்ளிழித்தாள் தோழா!
பள்ளியறையில்
இச்சைஇரத்தம் குடித்ததால்,
உன்னால்
கள்ளிஅறையில்பச்சை
இரத்தம் குடிக்கிறாள் தோழா!
வீதியில் போய்விறகு
தேடவேண்டும்
என்பதால்,
விஷம் கொஞ்சம் கொடுத்து
வீதியிலே
அனுப்பிவிட்டாயோ தோழா!
ஊரான் வீட்டுஇலவுக்கு ஓடிவந்தாய்...
இன்றுஉன் வீட்டு இலவென்றுதெரியாதோத் தோழா!
தெருவில் திரியும்
ஓர் தேரைக்குழந்தைபோல்
தீக்காயம் பட்டுவெந்தத்
தோலுடன்திரிகிறாள் தோழா!
உனக்குதாய்ச்சோறு போட்டவள்நாய்ச்சோறு
தேடுகிறாள்...
பசியோடு அலைந்தேபார்வை இழக்கிறாள்!
பாவம்,
உன்னை பெற்றதால்
தூங்கும் இடம்தெரியாமல்
துறவு முடித்துவிட்டாள்....
அவளின் இலவுக்கு
கருணை இல்லமே
குருணை கொட்டுகிறது...
காசுகொடுத்துத்தானே உன் கல்யாணக்காரியம்செய்து முடித்தாள்.!
ஒரு ரூபாய்க்குத்தான்
ஒரு கிலொ அரிசிவிற்க்கிறதே!...
ஒரு ரூபாய்செலவழித்தால்
உன் சாவுக்கு
ஒன்பதுரூபாய் நட்டமோ!
உன்னை மன்னிக்க,
நான் மனிதன் இல்லை...
உன்னை மன்னிக்க
தன்னை தண்டித்து,
தீயில்விழுந்துஉனக்கு
,தியாகம்செய்தாள் தோழா...
உன்னைமன்னிக்க முடியாமல்
என் இறுதிநொடிகள்
அவளை எரிக்கிறது தோழா....
மன்னித்துவிட்டேன்உன்னை...
அந்தபாவத்தால்
மறுநொடியில்நானும் மாய்ந்துவிட்டேன்தோழா!
அடுத்த நாளாவதுவந்து பார்ப்பாயா...??
சாம்பலாய்
கிடக்கும்என்னையும்
உன் தாயையும்அந்த ஆற்றங்கரையிலாவது
கரைத்துவிட்டுப் போவாயா!
மயானத்தையும் தண்டித்தவள்,
பாவிஉன்னை தண்டிக்க
அவளுக்கு மனமில்லை!
சுமந்த வயிறுமெல்லவும் முடியாமல்தின்னவும் முடியாமல்முடிகிறது தோழா......