தோசை எனும் அன்பு

அந்த
ஆறாவது தோசையிலேயே
வயிறு நிறைந்து
" போதும்மா " என்றதும்
" கொஞ்சம் இரு "
என்றபடி
மடமடவென
வெங்காயம் நறுக்கிப்போட்டு
ஏழாவது தோசையை
வெங்காய தோசையாகப்
பரிமாறிய
அம்மா.,
" முன்னைக்கு
வந்ததை விட
இப்ப லொடக்குனு
போயிட்டியே கண்ணு "
என்று
வெங்காயத்துக்குக்
கண் எரிவதாகச் சொல்லித்
துடைத்துக்கொண்டே
எட்டாவது தோசையின் மேல்
முட்டையை
ஊற்றிக்கொண்டிருந்தாள் !

எழுதியவர் : குருச்சந்திரன் (30-Mar-15, 1:46 pm)
பார்வை : 265

மேலே