நெஞ்சத்தின் வலி-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

(குறிப்பு:சாலையில் தனிமையில் அனாதையாய் நாதியின்றி நின்ற ஒரு சிறுவனை பார்த்த போது என் மனதில் எழுந்த வரிகள்)

சின்னச்சின்ன முத்தங்கள்
மார்பில் அனைத்து பாலூட்ட,
பாசமுள்ள அன்னை இல்லே,
தோள் சாய தந்தை இல்லே,என்
இந்த சோதனை நான் கற்ற பாடமே!

மாரிகால மழையினிலே,
சாலையோர தெருவினிலே,
ஈன்றவள் தூக்கி வீச,தெருநாய்
காத்ததென்று ஊரார் சொல்வார்கள்.

வண்ணவண்ணச் சோலையிலே
நேசமுள்ள தாய் ஒருத்தி மழலை
சொல்லும் பிள்ளைக்கு அன்னமூட்டே
நான் கண்டேன்.வேதனையில் கண்கள்
மூடி கண்ணீரை மறைக்க முனைந்தேன்.
ஆனாலும் முடியல்லே,நெஞ்சமெல்லாம் வலிக்குதே?

கனாக்காணும் இரவினிலே நான்
நடந்து பார்ப்பேன்.நிழல் கூட தெரியல்லே
தீபம் வீசும் விளக்கினிலே நான்
ஒலியூட்டே,தென்றலும் அணைக்குது?
பச்சை போர்வை விரித்த மண்ணில்
தண்மையான பூட்களும் முள்ளாக குத்துதடா?

என் மூச்சு நின்று போனால் ஜாதி பார்த்து
என் உடலை பறவை உண்ண கொடுக்காதீர்கள்,
மண்ணில் போட்டு புதைத்து விடுங்கள்.
இந்த ஏழைபாடும் கவிதையெல்லாம் ஊமை
பாடும் பாட்டல்ல?நொந்த நெஞ்சம் ஒன்று வரைந்த பாடமே!!!

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (31-Mar-15, 11:59 pm)
Tanglish : nenjaththin vali
பார்வை : 2137

மேலே