கண்ணீர் மட்டும் என் துணையாகுமே
![](https://eluthu.com/images/loading.gif)
காதலியே...!
உன்னை பிரியும் நேரம் நெருங்கிவிட்டது
ஆதலால், என் இதயம் நொறுங்கிவிட்டது....
வலியுடன் வழியறியாமல்
விழி பிதுங்கி நிற்கின்றேன்.......!
ஒளிமயமான என் வெளிச்சங்கள்
இரவாகிப் போனதனால்......!
மதி கெட்டவர்கள் செய்த சதியினால்
விதியென்று வீதியில் நிற்கின்றோம்...
பிரிவதற்கென்றே பிறந்த காதலர்கள் நாமல்லவா.....!
நான் எதிர்பார்த்து இதுவரை எனக்கு கிடைக்காதது,
நீயும்,,,,
மரணமும்...
இரண்டில் ஒன்றேனும் விரைவில் வேண்டும்...
ஐம்பூதங்களில் ஒன்றேனும் கோபம் கொண்டு
இந்த உலகத்தை அழிக்காதா...?
கல்லாய் நிற்கும் கடவுள்
என் கதை கேட்டு கண் விழிக்காதா...?
ரணமானது ராமனின் வாழ்க்கை...
சிதைந்து போனது சீதையின் வாழ்க்கை....
ராவணனுக்கு மட்டுமே இங்கு ராஜவாழ்க்கை......!