தேசியக் கொடி எனும் பறவை
ஆண்டுக்கு இருமுறை
ஆனந்தமாய் சிறகடிக்கும்
தேசியக் கொடி பறவையே.
உன் சிறகுகளை
மடக்கி வைப்போம் அடுத்த நாளிலே
மூவர்ணங்களில்
முக அழகுக் கொண்டவளே
சுதந்திரம் சுதந்திரம் என
சுக கீதம் பாடித் திரிந்தாய்.
சோகத்தில் தவித்த
இந்திய இன மக்களை குணமாக்க
இரவிலும் இறவாத
விடுதலை விடுதலை என
குரலெழுப்பிக் கூவித் திரிந்தாய்.
சிறகை நீ விரித்ததால்
சுகமான சந்தோஷக் காற்றில் நாங்கள்
சுவாசித்தே சிலிர்த்தோம். - உன்
சிறகுக்குள் எத்தனை
இந்தியரின் விழிப்புணர்வைக் கண்டோம்.
ஆதலால் - உன்னை
இருமுறையேனும்
பறக்க விடுகின்றோம்.- நீ
உச்சிக் கொம்புதனில்
உளமார பறக்கின்ற போது
உணர்வறிந்து உன்னைப் போற்றுகின்றோம்.
வந்தேமாதரம்,வந்தேமாதரம்.- என
வணங்கியே உன்(னை) மடிப்புக் கலையாமல்
மடித்து வைக்கின்றோம்.சுதந்திர நாளும், குடியரசு நாளும்
வரும்வரையில்.