வாழ்க்கை கற்கள்

வாழ்க்கை பாதை எங்கும்
கற்கள் சிதறி இருக்க
பாதங்கள் தேடுவதோ மலர்
போர்த்திய சோலை வனத்தை...

சிலநேரம் சிறு கற்கள்
பலநேரம் பாறைகள்
இன்னும் சில கருங்கற்கள்
அதோடு பாராங்கற்கள்

அத்தனையும் இருக்கட்டும் வழியில்
பாதங்கள் நடக்கும் பாதையில்
பயணங்கள் என்றும் நிற்கவில்லை
பாதைகளும் என்றும் முடியவில்லை

இல்லையேல், தோழா...
சிறுகற்களை மிதித்துச் செல்
பாறைகளை உதைத்து செல்
கருங்கற்களை கரைத்துச் செல்
பாராங்கற்களை ஒதுங்கிச் செல்
ஒதுங்கவில்லையேல் ஒதுக்கிச் செல்
பாதை நீண்டது
பயணம் முடிவில்லாதது...

இரா நவீன் குமார்

எழுதியவர் : இரா நவீன் குமார் (1-Apr-15, 7:17 pm)
Tanglish : vaazhkkai karkal
பார்வை : 198

மேலே