சீண்டிப்பாருங்கள்

நான் வானில் தோன்றும் விண்மீன்அல்ல ,
கிணற்றில் விழுந்த நிலவின் பிம்பம்!
என்மீது கல்லெறிந்து பாருங்கள்
ஆயிரம் அவதாரம் எடுப்பேன்!

நான் உயரப் பறக்கும் பருந்தல்ல,
சின்னஞ்சிரிய தேனீ தான்
என் கூட்டில் கொஞ்சம் கை வைத்துப் பாருங்கள்!
கொட்டிக் கொட்டி ஓடவைப்பேன்!

நானொன்றும் அழகிய பூஞ்சோலையல்ல,
கருவேலம் முள்தான்,
என்னை கொஞ்சம் மிதித்துத்தான் பாருங்கள்!
வலியில் துடிக்க வைப்பேன்!

நானொன்றும் மகானல்ல வழக்கமான மனிதன் தான்,
அதனால் தான் சொல்கிறேன்,
என் தன்மானத்தை
சீண்டிப்பாருங்கள்
நான் யாரென்று புரியும்!!!!!!

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (1-Apr-15, 11:23 pm)
சேர்த்தது : கோபாலகிருட்டிணன்
பார்வை : 76

மேலே