காதல் பரிசு

என் எண்ணக்கடலில்
உன் நினைவலைகள்
என் வாழ்வென்னும் வெள்ளைத்தாளில்
வண்ணம் தெளித்ததுவோ!

கிணற்றுக்குள் நிலவொன்று
விழுந்ததுவோ! அதை மீன்கவ்வ நினைத்திங்கு ஏமார்ந்து நின்றதுவோ!

தாகத்தில் தவித்திருக்கும் மானுக்கு தூரத்தில் நீர்நிலைகள் தெரிந்ததுவோ!
துணையுடன் நீ வரும் நிலை கண்டு கானல் நீரெனத் தெளிந்ததுவோ!

என் வாழ்வென்னும் வண்ணத்தாளை
ஓவியமாக்கித் தருகிறேன் உனக்கு
காதல் பரிசாக.....

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (2-Apr-15, 1:18 pm)
Tanglish : kaadhal parisu
பார்வை : 343

மேலே