சிறிது தடுமாற்றம்
சிறிது தடுமாற்றம்...
சீக்கிரமே ஆறிவிடும்
காயமல்ல...
உன் நினைவுகள் மட்டுமே
வருடிக் கொடுக்கின்றன
என் இதயத்தை...
இப்போதெல்லாம்
அந்த வருடல்களைத்
திருடிக்கொண்டு போகின்றன
சில நெருடல்கள்...
எவ்வளவோ முயற்சித்தும்
எதையும் மறக்க இயலவில்லை
என்னால்...
பழைய நிலைக்கு
மீண்டும் என்னை
மீட்டெடுக்க இயலவில்லை...
உன்மீது கொண்ட
அன்பென்பது
என்றுமே
அந்தியம் காணது...
நெருடல்கள்
என் நெஞ்சத்தை
நெரிக்கின்ற நிலை
நீடித்தே இருப்பதனால்
நம் நட்பின்
தொடர்ச்சிக்கான
அளவீடுகள் சற்று
அரிதானதென்பதை
அறியவிழைகின்றேன்...
தீர்ந்துவிடும் என்ற
நம்பிக்கையில் நான்...
தீராவிடில் என்றக்
கேள்வி மட்டும்
மனதில்
அச்சமாகவே உள்ளது...