சிலரின் சிலதுகள் - அமுதினி
அவன் அப்படித்தான்
என்பனாம்
அப்படியா அவனா
எப்படி என்றானாம்
மற்றொருவன்..
இன்னுமொருவன்
மற்றொருவனிடம்
அவனா அவளா
என்றானாம் .
இன்னுமொருவனின் காதலியாம்
இதை சரியாய் தப்பாக கேட்டாளாம்
ஒ அவனின் அப்படியான
அவளா அவள் என்றாளாம்
இன்னொருத்தியிடம்
இன்னொருத்தியின் தாயும்
இதைக்கேட்டளாம்
அவனும் அவளும்
புருஷன் பொஞ்சாதியாம்
என்று சொல்லி சிரித்தாளாம்
தன் புருஷனிடம்.
கிழட்டு புருஷனோ
தன் கிழட்டு நண்பனிடம்
அவனின் மனைவி
இவனின் காதலியாம்
என்று கிளுகிளுப்பாய் சிரித்தானாம்
கிழட்டு கிழவன்.
இதை கேட்ட செய்தியாளன்
எழுதினானாம்
ஓர் தலையங்கம்
அவனின் காதலியும்
அவனின் மனைவியும்
எவனோக்கோ முந்தி விரித்து
பந்தி போட்ட நடிகை என.
கூமூட்டைகளின் கூற்றுகள்
சிலபோது இவ்வாறே.
அய்யோ அய்யோ
கடவுளே மாரியாத்தா..!