மாரோடு கட்டியணைக்க வேண்டாம்

பன்றி குட்டியாய்
பிறந்து இருந்தாலும் பயன்
கருதி பசிக்கு சோறூட்டி இருப்பார் .

படிப்பால் கறக்கும்
பசுவிற்கு புல்கொடுக்கும் மனிதன்
பத்து தலைமுறை வாழவழி
பெண்ணால் என்பதை மறந்தானே ..

மழலை நான் பேசுகிறேன்
மாரோடு கட்டியணைக்க வேண்டாம்
மறந்தும் எனக்கு மாலைபோட நினைக்காதே

மழலையாய் நான்
மாதாபால் அருந்த எண்ணியே
அழுகிறேன் பெண்ணென்று தெரியாமல்

கள்ளிப் பாலையும் கருசுமந்தவள்
கல்நெஞ்சம் கொண்டு கொடுப்பாளென
கண்டிருந்தால் ...கருவாககூட அவளுக்கு
நான் சுமையாய் இருந்திருக்க மாட்டேன் ..

ஈரைந்து திங்கள்
சுமந்தென்னை ஈன்றவளே
எனக்காக சுரக்கும் அந்தப்பாலை
மட்டும் ஊட்டிவிடு ,நேரம் ஒதுக்கி ..

வளர்ந்து நான்
வான்தொட கூட செல்லலாம்
பெண்ணாய் பிறந்தது பாவமென்று
நதிநீராட செல்லுமுன்னை ஆகாயம்
அழைத்துச் செல்லக்கூட என்னால் இயலும் ...

பெண்ணே நீ
உன்னை அறி உனக்குள்
இருக்கும் பெண்மையின் ஈ(வீ)ரமறி ...

பெண்கல்வி
உண்டென்பதை மறக்காதே...
நடக்க மட்டுமே கற்றுக்கொடு எனக்கு
நடைபாதையை நான் தெரிவு செய்கிறேன்..

ஏதுமுன்னால் இயலாதபோது
எங்கோ இருக்கும் அந்த ஆதரவற்ற
இல்லம் கொண்டாவது விட்டுவிடு ..

எமனிடம் செல்லும் நாள்வரையிலும்
வாழ்ந்து நான்சரித்திரம் படைக்கிறேன்
அனாதையாக ....


(சமீபத்தில் எங்கள் ஊரில் ஒரு பெண் குழந்தையை
கொன்று விட்டார்கள் )

எழுதியவர் : ப்ரியாராம் (3-Apr-15, 11:39 am)
பார்வை : 226

மேலே