கருகும் கவி

கனத்த நிசப்தத்தைக்
கலைத்துச் செல்லும்
காற்றின் கையசைப்பில்
கரைந்து செல்லும்
சருகின் தொலைதல்.
நிழல்களை
மொழி பெயர்க்கா
ஒளிகளின் நிராகரிப்பில்
நிர்வாணியாய் ஒதுங்கும்
நுரையற்ற கடல்
அலை மீது
நிலையில்லாமல் ஊர்கிறது
நினைவின் நண்டு
வாழ்க்கை நதி உமிழ்ந்த
வலிமையற்ற சாக்கடைகள்
வரவேற்க நாதியின்றி
ஏக்கமுடன் கடந்து
செல்கிறது காலக்கடல்
இன்னும் கீழிறங்க
மறுக்கும் அந்திச்
சூரியனில் எரிந்து
கருகிறது
ஒரு கவியின் கரு ..

எழுதியவர் : உமை (3-Apr-15, 10:17 pm)
சேர்த்தது : உமை
Tanglish : karugum kavi
பார்வை : 70

மேலே