இனம் புரியா இளவேனில்

இசையோடு இணக்கமாகியும்
இரகசியம் இல்லா
தனிமைகளோடு தவண்டாலும்
அகவிதழ் அலைமோதினாலும்
நானெனும் செருக்கு
அவனிடம் உரிமை கொள்ளச் செய்வதேனோ

தந்திரமா போர்க்களம் செய்யவே
குறும்புகளை கூட்டி வைத்திருக்கிரானோ
பரந்த நிலவொளியாய் மனதுற்குள்

உள்ளங்களை அபகரித்து அன்பால்-ஒரு
செங்கோல் ஆட்சி அவன் இரு கரங்களில்
விண்மீன்கள் கூட அடி பணிந்து விட்டதோ
அவன் அன்பிற்கு -என்னை விட்டு
இரவின் முழு நிலவை நானென்று வியப்பாக பார்ப்பதற்கு

மடலில் மனங்கள் சேருமோ -இன்று
இரு மனங்களில் சேர்ந்து விட்டதே
வலிமையும் மெலிந்து போய்
அசதியாய் தூங்குகின்றதே -ஆழ்ந்த
தனிமையில் மூழ்கி

ஆணிவேராய் பெண்மைஎன்னும்
துணிவையும் விட்டும் வைக்கவில்லை
சில நொடியில் மெளனமாக

அவனி முழுதும் நினைப்புக்கள் மட்டும்
உயிர் வாழ்கின்றதே சோறு தண்ணி இல்லாமல்
அழலாய் நெஞ்சு கொதிக்க
எழிலாய் சிறு பொன்சிரிப்பு

அஞ்சி அஞ்சி நெருங்க நினைக்கும்
நிலையில்லா தடுமாற்றத்தோடு -இன்னும்
மாறவே இல்லை -இவன்
எனைவிட்டு தன் அகமுடையாள் அருகில் நிற்க்கும் போது கூட

எழுதியவர் : கீர்த்தனா (3-Apr-15, 3:18 pm)
பார்வை : 118

மேலே