அல்லாதவைகள் 0 தாரகை 0
அனுமதி கேட்டுக்கொண்டு வருவதற்குப்
பெயரல்ல
"உணர்வு"
பல உண்மைகளில் அல்லாது
ஒரு பொய்யில்
நம்பப்படுவதல்ல
"நம்பிக்கை"
நாளைக்கான 'வேஷத்தை'
முந்தைய இரவில்
தீர்மானிப்பதல்ல
"திட்டமிடுதல்"
சோதனையின் கடைசிகட்டத்தில்
வேறுவழியின்றி
வருவதற்குப் பெயரல்ல
"பொறுமை"
கீழுள்ளோரை சமமாக நடத்துவதேயன்றி மேலுள்ளவர்க்கு கட்டுப்படுவதல்ல
"பணிவு"