தேன் தேடும் பறவை

துளி தேனுக்காக
மலரைத் துருவித் துருவி
தேடும் பறவையைக் காணுகையில்
மாதக் கடைசியில்
வைத்தியச் செலவுக்கு
பணத்துக்காக
சாமி உண்டியலை
ஆட்டி ஆட்டி
சில்லறைத் தேற்றும்
அப்பாவே
கண்முன் தோன்றுகிறார்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (4-Apr-15, 12:59 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 133

மேலே