சிங்கப்பூரின் சிற்பி

பார்ப்பாரற்றுக் கிடந்த தீவு
கேட்பாரற்றுக் கிடந்த நோவு
வறுமையும் அழுக்கும் வாழ்ந்த தேசம்
பகல் வெளிச்சம் தவிர
வாழ்க்கை வெளிச்சம் படராத பூமி

ஓராதாரம் உண்டா ?
நீராதாரமே இல்லை
ஒரே ஆதாரம்
லீ க்வான் யூ

காடு வெட்டி அல்ல
கடலைத் தூர்த்து
வீடு கட்டினான்
கடல்நீர் எடுத்துக்
குடிநீர் ஆக்கினான்

அறம் , ஒழுக்கம்
ஆக்கம் , வளர்ச்சி
சுத்தம் , சுகாதாரம்
பேசியவன் இல்லை
பேணியவன்.

உயர்ந்த சிந்தனை
உயர்ந்த சம்பளம்
சிறந்த நிர்வாகம்
திறந்த நிர்வாகம்

ஊழலை ஒழிக்கவில்லை
ஊழல்
உற்பத்தியே ஆகவில்லை

அரசு வேலையா
உடனே
ஆவன ஆகும்.
ஆவணம் தேடும்
அவலம் இல்லை.

முன்பு சிங்கப்பூர்
பேரளவுக்கு ஒரு தேசம்
இன்றோ பெயர்பெற்ற தேசம்.

வேண்டாதவற்றை வெட்டி எடுத்து
ஒரு தேசத்தை கட்டி எழுப்பிய
சிற்பியே !!!
நீ வாழ வந்தவன் இல்லை
வாழ்விக்க வந்தவன்.

உன்னை வணங்குவதே உயர்வு.

எழுதியவர் : (4-Apr-15, 1:31 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 83

மேலே