துளிப்பாக்கள்

துளிப்பாக்கள்..!!!

பூமிக்கு என்ன கோபம்??
நிலவின் முகத்தில் கரியை பூசுகிறது
சந்திர கிரகணம்...!!!

வானத்திலும் நிழல்
அதிசயமாய்...
சந்திர / சூரிய கிரகணம்..!!!

தினமும் பெயர்த்தெடுக்கிறார்கள்
குறைந்தாலும் கூடுதல் அழகில்
பிறை நிலவு....!!

யார் வெட்டிப் போடுகிறார்கள்??
துண்டு துண்டாய் விழுகிறது
மழைத் துளிகள் ..!!

முள் கிழித்தாலும் அழுவதில்லை
இனிமையாய் இசைபாடுகிறது
தென்றல்....!!!

எழுதியவர் : சொ.சாந்தி (5-Apr-15, 3:57 pm)
பார்வை : 106

மேலே