ரத்த தானம்
விரும்பி ஏற்கவில்லை
இயற்கை தந்த விபத்து
எதிர்பாராத சோகம்
ஏராளமான ரத்த இழப்பு
தேவை ரத்த தானம்...
இறந்து கொண்டிருக்கும்
உயிர் அணுக்களை
மெருகூட்டி உலகம் பார்க்கச் செய்ய
ரத்ததானம் தேவை....
விபத்து பாறையில்
மோதலை சேமித்து விதி குடித்த
உடலின் உயிர் திரவம்
தீரப் போகும் இந்த கடைசி நேரத்தில்
மீட்கத் தேவை ரத்த தானம்.....
தார்ச்சாலைக்கு ரத்ததானம் செய்து
உயிர்ச்சாலைக்கு உரம் தேடி
ஊரெல்லாம் அலைந்து
பெற்றோர் வேதனையில் வெந்து
விண்ணுலகம் செல்ல விரும்பும் நேரம்
தேவை ரத்த தானம்.....
மெல்ல மெல்ல உயிர்குடிக்கும்
காலனின் இதழ்களில் இருந்து
காப்பாற்ற தேவை ரத்ததானம்...
ஓரினத் துளிகளை வழங்கும் வழியால்
போகத் துடிக்கும் உயிரை
பிடித்து வைக்கும் தெய்வம் ரத்ததானம்..
அஸ்தியாகி கரையப்போகும்
அர்த்தமற்ற உடலின் உரத் துளிகளை
வழங்குவோம் ரத்த தானமாக...