வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்
அழகிய ராட்சஸி
21ம் நூற்றாண்டின்
க்ளியோப்பாட்ராவே !
ரவிவர்மாவின்
ஓவியத்தில் இருந்து
உயிர்த்து வந்தாயா ?
உன் புன்னகைச் சிதறல்கள்
என் மனதில்
பூக்களை மலர்விக்கின்றன
உன் வார்த்தைத் தெறிப்புகள்
என் கவிதை வரிகளை
கேலி பேசுகின்றன
உன் இமைச் சிறகுகளின்
படபடப்பில்
நான் எங்கெங்கேயோ
பறந்து கொண்டிருக்கிறேன் .
உன் பார்வை வசீகரத்தில்
என் ஏழ்மை மறந்து
செல்வச் செருக்கோடு
இறுமாந்திருக்கிறேன் .
உன் தரிசனம்
கலவி புரியும்
ஆனந்தப் பரவசம்.
உன்னைப் பிசைய
மண் எடுத்த இடத்தை
இன்னும் பிரம்மன்
ரகசியமாகவே வைத்திருக்கிறான்.
உன் நளின ஒய்யார
நடைச் சிருங்காரத்தில்
பூமியே சிலிர்த்துப்போய்க் கிடக்கிறது.
மொழியின் உச்சம் கவிதை
அழகின் உச்சம் நீ !

