ஐம்புலன்களின் காதல் கரு

ஐம்புலன்களின் காதல் கரு....
கடவுளை அறியும் பாதையில்
காதலின் மொட்டு திறக்கப்பட வேண்டும்...
காதலின் மலர்ச்சி என்பதும் அருபமானது...
காதலின் இன்பம் என்பதோ
ஐம்புலன்களையும் கடந்தது.....
இயந்திரத்தனமான வாழ்வியலில்
அரும்பாத ஐம்புலன்களும்
காதல் அரும்பும் பொழுதில்
உயிர் சுவை உணரும்....
கண்களுக்கு இன்பமே
காட்சிகளை கண்டுணர்வதில்
இமைவிரிவில் பார்க்க முடியாத
இயற்கையின் கொடையினை
காதல் அழகாய் எவரும்
அறியா வண்ணம் எடுத்து காட்டும்
காதுகளுக்கு இன்பமே
கவின்மிகு இசையைக் கேட்டுணர்வதில்
செவியில் ஊடுருவாத
சங்கீதத்தைக் காதல்
கவிதையின் வடிவில்
உன்னுள்ளே உணர்த்திடும்....
நாவிற்கு இன்பமே
நற்சுவை உணவை புசிப்பதில்
இதல்களின் மறைவில் மலராத
நாவின் சுவை மொட்டுகளை
காதல் ரசம் ஊரும் வேளையில்
இதல்களின் வாயிலாக உணர்த்திடும்
நாசிக்கு இன்பமே
நறுமண நுகர்ச்சியில்
நுனிநாசியில் நுகரப்படாத
நறுமண வாசத்தை
காதல் வாசம் வீசும் வாடைக்
காற்று உயிரில் ஊடுருவும்....
ஊணிற்கு இன்பமே
உடலின் ஸ்பரிச உராய்வில்
தேகம் தீண்டும் சாரலின்
ஸ்பரிச சுகம்தனை அறியாத ஈன
ஸ்வர வாழ்வில் காதல்
தேகத்தின் தாகத்தை தீர்க்கும்....
ஓங்காரமிடும் ஒத்திசைவற்ற
இயந்திர வாழ்வில்
இன்பமூட்டும் காதல் அரும்பு
ஒளிர்ந்து மலர்வதை
உணரப்படும் பொழுதில்
ஐம்புலன்களும் புதிதாக மலரும்....
காதலின் மொட்டு மலர்ந்ததில்
கருத்தரித்தவளே அறியாமல்
காதல் கரு ஒன்று உயிரானது
கடவுளின் அனுகூலத்தில்
கவிதை என்று பிரசவித்தது...
கருவாக உயிர் பெற்ற
காதல் கவிதை
சூரியா