நிழல்- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
என்னோடு ஒருவன் வந்து
கொண்டிருக்கிறான்.அவன்
என் விழிகளுக்கு புலப்பட்டாலும்
மெய்பிம்பத்தை என்னால்
அறிய முடியவில்லை.
நான் மண்ணில் பிறந்த
போது என்னோடு வந்தானா?
நான் நக்கரித்து தவழ்ந்து
போது என்னோடு வந்தானா?
சொந்தக்காலில் நான் தலை
நிமிர்ந்து நிற்கும் போது
என்னோடு வந்தானா?
என்னோடு எப்போது பயணித்தான்
என்று எனக்குத் தெரியாது.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை
நான் மூச்சிழ்ந்து கல்லறை
தூங்கும் முன் அவன் தூங்கிக் கொண்டிருப்பான்.
அவன் வேறு யாருமில்லை? எம்தேன் நிழலே....!!