வெல்வதற்கேது வேண்டும்

சொல்வதை கேட்கும்
வேளையாள் வேண்டுமா ?
நீ
சோர்ந்தாலும் சோர்வாகா
சொந்தங்கள் வேண்டுமா?
கால் ஊன்றும்
இடமெல்லாம்
ஊக்குவிக்க வேண்டுமா?
பணம்,
அள்ளியே தீர்ந்தாலும்
மறுபடி முதல் போட,
கரங்கள் தான் வேண்டுமா?
என்ன வேண்டும்?
ஆறுதலுக்கு ஆட்களா?
அரவணைப்புள்ள நாட்களா?
கடந்து போன
காலமா?
கடிந்து கொள்ளா உலகமா?
ஏது வேண்டும்?
எவற்றையும்
யாரையும் கேட்காதே!
நீ மட்டும் போதும் உனக்கு.
துணிந்து வா,
இந்த உலகை ஜெயிக்க !
உலகமே வரும் உன்னை
சுமக்க !!!!

எழுதியவர் : மு.சுந்தரபாண்டியன் (6-Apr-15, 12:27 pm)
பார்வை : 76

மேலே