சுழியங்கள்

ஒரு ரோஜாவில்
இதழ்களை தின்ற காற்று
சொல்லும் இறுதி விடை
சுழியம்.


ஒரு தட்டில் விழும்
சில்லரைக்காசில் எழும்
சத்தம் சொல்லும்
பிச்சைக்காரனின் காதில்
சுழியம்.

நேற்று உரசிய காதல்
இன்று விலகிய மர்மம்
எல்லாம் சொல்லும்
இறுதியாக சுழியம்.

சுழியம் கண்டறிந்த நாட்டில்
நாம் சுழியத்தின் மன்னர்கள்.
இருந்தும்
சுழியத்தை மறந்து
ஏனைய எண்களில்
எண்ணங்களாய் எரிகிறோம்.

உடல் என்பது
இறுதியில் சாம்பலாகும்
அதுவும் கடலில் கரையும்
சுழியமாய்.

எழுதியவர் : வியன் (6-Apr-15, 12:39 pm)
பார்வை : 96

மேலே