என் அகராதியில் ……

தாய் ……
என்னைப் படைத்தப் படைப்பாளி
என்றும் காக்க மறவாத
நான் வணங்கும் தெய்வம் …!

தந்தை ……
தன்னைவிட முன்னேற
துடிக்கும் ஓர் இதயம் …!

அண்ணன் ……
என் வாழ்வில் தடைக்கற்களை
வெற்றிக்கற்களாக மாற்றுபவன் …!

தம்பி ……
வறண்ட பூமியும் பூ பூக்கும்
தம்பியுடையான் …!

அக்கா, தங்கை ……
அக்கா என் வாழ்வில் தாயைப் போன்றவள்
தங்கை என் வாழ்வில் மகளைப் போன்றவள் …!

நண்பன் ……
முடியாது தெரியாது என்ற
வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவன் …!

காதல் ……
வாழ்க்கை என்னும் பாடசாலையில்
எல்லோருக்கும் கற்பிக்கப்படும் பாடம் …!

காதலி ……
என் ஆக்கத்திற்கும்
என் அழிவிற்கும்
அவளே பொறுப்பு …!

மனைவி ……
என் இன்ப துன்பங்களுக்கு
அவளே இளவரசி …!

மரணம் ……
துயில் கலையாத என்னும் பாடசாலையில்
நிம்மதியான உறக்கம் …!

எழுதியவர் : ராஜா (6-Apr-15, 2:27 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 150

மேலே