சொல்ல தயங்கும் வார்த்தை

வெற்றியோ -
தோல்வியோ -
இளமையின் தவமாவது
காதல்...!

வெறுமையாய்ச் சந்தித்தோம்
நீ - என்னுள் நிறம்பினாய் ...!
நான் உன்னுள் நிறம்பினேன்...!
நம்மிருவர் இதயம் முழுதும்
ததும்பி வழிந்தது காதல்..!

இமைகளை பறித்துக்கொண்டு
உறக்கம் தருகிறாய் ...உடன்
கனவுகளில் நிதம் ஒரு
கவிதை சொல்கிறாய் .....!

மனதில் காதல் சிறகுகளை
ஓட்டவைக்கிறாய்... சிறகுகள்
இரவலா .. ? - இல்லை
பறக்க உன் பரிசுகளா...?

விழி திறந்திருக்கும்
பொழுதுகளை விட
விழிக்காதிருக்கும்
பொழுதுகளில் தான்
முழுமையாக
காண முடிகிறது உன்னை !

அருகருகே அமர்ந்து
கௌரவப் போர்வைக்குள்
காதலை மறைத்து
ஏதேதோ பேசி - நேரத்தை
நெருப்பிலிட்டுக் கொண்டிருக்கிறோம்

வெகு தொலைவில்
முகமூடிகளைத் கிழித்துவிட்டு
காதலாய் கட்டிப்புரண்டு
கொண்டிருக்கின்றன - நம்
இதயங்களிரண்டும். ! !

-----------------" செல்லம்" ரகு ..
திருப்பூர்.

எழுதியவர் : (6-Apr-15, 5:26 pm)
சேர்த்தது : செல்லம் ரகு
பார்வை : 69

மேலே