ரணம் பெயர்க்க

பெண் குழந்தை பிறந்தால்
உன் நிறைவேறாத
காதலுக்குச் சொந்தக்காரியின்
பெயரை வைப்பதென்னவோ
நியாயந்தான்

ஆனால்
ஆண்குழந்தை பிறந்தால்
பெயர் வைக்கும் உரிமையை
மனைவிக்குக் கொடுத்துவிடு
பின் பெயர்க்காரணம் கேட்காதே.

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (6-Apr-15, 5:52 pm)
பார்வை : 83

மேலே